Home தேசிய செய்திகள் தெலங்கானாவில் ​போக்குவரத்து விதிமீறல் ​அபராத பாக்கி ரூ.925 கோடி: மின்சார பில்லில் சேர்ப்பது குறித்து அரசு...

தெலங்கானாவில் ​போக்குவரத்து விதிமீறல் ​அபராத பாக்கி ரூ.925 கோடி: மின்சார பில்லில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசனை

0

தெலங்கானாவில் போக்​கு​வரத்து விதி​களை மீறிய வாக​னங்​களின் அபராத கட்டண பாக்கி ரூ.925 கோடி​யை சம்​பந்​தப்​பட்ட வாகன ஓட்​டிகளிட​மிருந்து மின்​சார கட்டணத்துடன் வசூலிக்க அம்​மாநில அரசு திட்​ட​மிட்டு உள்​ளது.

சாலை விபத்​துக்​களை தடுக்க போக்​கு​வரத்து விதி​முறைகளை வாகன ஓட்​டிகள் கண்​டிப்​பாக கடைபிடிக்க வேண்​டும். அடிக்​கடி விதி​மீறலில் ஈடு​படு​பவர்​களின் ஓட்​டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதி​மன்​றம் சமீபத்​தில் ஓர் ஆலோசனையை மாநில அரசுகளுக்கு வழங்​கியது. மேலும், இது​வரை அபராதம் செலுத்​தாதவர்​களிட​மிருந்து மின்​கட்​ட​ணம் மூலமாக கூட அவர்​களிட​மிருந்து வசூலிக்​கலாம் எனவும் கருத்து தெரி​வித்​திருந்​தது.

தெலங்​கா​னா​வில் கடந்த 2024 ஜனவரி 1 முதல் 2026 ஆகஸ்ட் 15 வரை போக்​கு​வரத்து விதி​களை மீறிய​வர்​கள் 3.7 கோடி பேர். அதாவது மாதத்​திற்கு 12 லட்​சம் பேராகும். ஒரு நாளுக்கு 39,400 பேர், நிமிடத்​திற்கு 27 பேர் என கணக்​கிடப்​பட்​டுள்​ளது. தெலங்கானா​வில் கடந்த 32 மாதங்​களில் ரூ.1,332.42 கோடி அபராத தொகை கட்​டப்பட வேண்​டும். ஆனால் இது​வரை அதில் 25% பேர் மட்​டுமே அபராத தொகையை செலுத்தி உள்​ளனர். மீதம் ரூ.925.77 கோடி தெலங்​கா​னா​வில் மட்​டும் அபராத கட்டண தொகை பாக்கி உள்​ளது.

இதனை எவ்​வாறு சம்​பந்​தப்​பட்​ட​வர்​களின் மின்​சார கட்டண பில்லில் சேர்ப்​பது என்​பது குறித்து தெலங்​கானா போக்​கு​வரத்து துறை ஆலோ​சித்து வரு​கிறது.

அதிவேகம், சிக்​னலில் நிற்​காமல் செல்​வது, ஹெல்​மெட் அணியாமல் வாக​னம் ஓட்​டு​வது, சீட் பெல்ட் அணி​யாதது, ராங்ரூட்​டில் செல்​வது, வாக​னம் ஓட்​டும்​போது செல்​போனில் பேசிய​வாறு செல்​வது என போக்​கு​வரத்து விதி​முறை​கள் மீறப்படுகிறது. விதி​மீறல்​களில் ஈடு​படு​பவர்​களிடம் அபராத கட்டணம் வசூலித்​தால் மட்​டும் போ​தாது, அவர்​களின் ஓட்​டுனர் உரிம​மும் பறிக்​கப்பட வேண்​டும்​ என்​ப​தே பலரின் கருத்தாக உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version