Home தேசிய செய்திகள் உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியிடம் 130 தொகுதிகளை கேட்கும் காங்.

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சியிடம் 130 தொகுதிகளை கேட்கும் காங்.

0

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்த பேச்சுவார்தையில் 130 தொகுதிகளின் விருப்பப் பட்டியலை காங்கிரஸ் சமாஜ்வாதியிடம் வழங்கியுள்ளது.

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் இடையேயான முதல் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரியின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தச் சந்திப்பில், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. ராம் கோபால் யாதவ், “நீங்கள் என்ன முடிவெடுத்துள்ளீர்கள்?” என்று கேட்டதாகவும், அதற்குப் பதிலளிக்கும் விதமாகக் காங்கிரஸ் தலைவர்கள் சுமார் 130 தொகுதிகள் அடங்கிய பட்டியலை மேஜையில் வைத்ததாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

குறிப்பாக தங்களது பாரம்பரிய கோட்டைகளான அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கோரியுள்ளது. இதுபோல சமாஜ்வாதியின் கோட்டைகளான இட்டாவா மற்றும் மெயின்புரி ஆகிய மாவட்டங்களைத் தவிர, மாநிலத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸின் இந்த விருப்பப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட சமாஜ்வாதி தலைவர்கள், உடனடியாக மாற்றுத் திட்டம் எதையும் முன்வைக்கவில்லை. கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் இதுகுறித்து ஆலோசித்த பிறகு, செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெறும் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவதாகக் கூறிச் சென்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version