கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2024-25ம் நிதி ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ. 12 லட்சத்து 86 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். விதை உற்பத்தி, விதை விநியோகம், எந்திர நடவு, உயிர் உர விநியோகம் மற்றும் பயிர் பாதுகாப்பு திட்டங்களுக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.














