நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வீரமணி மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவரது பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.












