நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்றுமுன்தினம் அண்ணா பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலைய கழிவறை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற லிங்கம் என்ற சுயம்புலிங்கம் (48) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், சோதனை செய்ததில் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. லிங்கம் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














