‘பூக்கி’​யில் ரொமான்ஸ் காமெடி கதை

0
15

ஒளிப்​ப​தி​வாளர் கணேஷ் சந்​திரா இயக்​குந​ராக அறிமுகமாகும் படம், ‘பூக்கி’. இதில், அஜய் திஷன் ஹீரோ​வாக நடிக்கிறார். ஜோடி​யாக தனுஷா நடிக்​கிறார். பாண்டிய​ராஜன், சுனில், இந்​து​மதி மணி​கண்​டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்​டி, ஆதித்யா கதிர் உள்​ளிட்ட பலர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

ரொமான்ஸ் காமெடி கதை​யாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தை, விஜய் ஆண்​டனி பிலிம் கார்ப்​பரேஷன் சார்​பில் ஃபாத்திமா விஜய் ஆண்​டனி தயாரித்​துள்​ளார். பிப்​.13-ல் வெளி​யாகும் இப்​படம் குறித்த செய்​தி​யாளர்​கள் சந்​திப்​பில், கணேஷ் சந்​திரா கூறும்​போது, “கேம​ரா​வுக்கு பின்​னால் இருந்து ‘ஆக் ஷன் – கட்’ கேட்​டுக் கொண்​டிருந்த நான், முதல் முறை​யாக கேம​ரா​வுக்கு முன்​னால் இயக்குநராக வந்​திருக்​கிறேன்.

இந்த வாய்ப்பு தந்த விஜய் ஆண்​டனி சாருக்கு நன்​றி. என் மீது அவர் வைத்த நம்​பிக்​கையை காப்​பாற்றி இருக்​கிறேன். இந்த படத்தை வெறும் ஆறு மாதங்​களில் முடித்​திருக்​கிறோம். இன்​றைய சூழலில் ஒரு படத்தை விரை​வாக முடித்​து, வணிக ரீதி​யாக​வும், வெளி​யீட்​டிலும் ஒழுங்​காக கொண்டு வரு​வது எளிதல்ல. இந்​தப் படம் அனை​வருக்​கும் பிடிக்​கும்” என்​றார்.

தயாரிப்​பாளர் விஜய் ஆண்​டனி பேசும்​போது, ” இப்​படத்​தின் இயக்​குநர் கணேஷ் சந்​தி​ராவை முதலில் கேம​ராமே​னாக அறி​முகப்​படுத்​தினேன் என்​ப​தில் பெரு​மை. இன்று அவரை இயக்​குந​ராக மீண்​டும் அறி​முகப்​படுத்​து​வது இன்​னும் பெரு​மை. இந்​தப் படம் கண்​டிப்​பாக ரசிக்​கும்​படி​யாக இருக்​கும்” என்​றார். படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here