ரோஹித் சர்மாவின் எதிர்காலம்… ஊகங்களுக்கு ‘தீனி போட’ விரும்பவில்லை: பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அதிரடி

0
28

ரோஹித் சர்மா மிகச் சிறப்​பாக விளை​யாடி வரு​வதாகவும் இதனால் அவரது எதிர்​காலம் குறித்த ஊகங்​களுக்கு ‘தீனி போட’ விரும்​ப​வில்லை என பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா தெரி​வித்​துள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் சமீப​கால செயல்​பாடு​கள் குறித்த ஆய்​வுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் டெஸ்ட், ஒரு​நாள் போட்டி அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில், டி 20 கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர், தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் காம்​பீர், பெங்​களூரு பிசிசிஐ உயர்​திறன் செயல் மையத்​தின் இயக்​குநர் விவிஎஸ் லக் ஷ்மன் மற்​றும் பிசிசிஐ உயர்​மட்ட அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். அதேவேளை​யில் இந்​திய அணி​யின் தேர்​வுக்​குழு தலை​வர் அஜித் அகர்​கர், இந்த ஆய்​வுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்​லை.

கூட்​டத்​துக்கு பின்​னர் பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா கூறும்​போது, “ரோஹித் சர்மா அனைத்து ஆட்​டங்​களி​லும் சிறப்​பாக விளை​யாடி வரு​கிறார். இதற்கு மேல் வேறு என்ன வேண்​டும்? கடந்த போட்​டி​யில் (இங்​கிலாந்​துக்கு எதி​ராக) கூட ரோஹித் சர்மா 138 ரன்​கள் விளாசி​னார், பிறகு எதற்​காக அவரது எதிர்​காலம் குறித்து ஊகங்​கள் எழுகின்​றன. ஊகம் பரப்​புபவர்​களுக்​குத் தீனி போட நான் விரும்​ப​வில்​லை.

தேர்​வுக்​குழு தலை​வ​ரான அஜித் அகர்​கர், வெளியூரில் இருப்​ப​தால் அவரால் ஆய்​வுக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள முடிய​வில்​லை. இந்த கூட்​டம் மிகக் குறுகிய கால அவகாசத்​தில் அவசர​மாகக் கூட்​டப்​பட்​டது. அஜித் அகர்​கர் இருக்​கும் பகு​தி​யில் இணைய வசதி சரி​யில்​லாத​தால் ஆன்​லைன் மூல​மாக​வும் அவரால் இணைய முடிய​வில்​லை” என்​றார்.

தேர்​வுத் குழுத் தலை​வ​ராக அஜித் அகர்​கருக்​குப் பதவி நீட்​டிப்பு தரு​வது குறித்து ஆய்​வுக்​கூட்​டத்​தில் எது​வும் பேசப்​பட்​டதா என்று தேவஜித் சைகி​யா​விடம் கேட்​டதற்​கு, “கூட்​டத்​தில் அப்​படிப்​பட்ட எந்த உரை​யாடலும் இடம்​பெற​வில்​லை” என்று பதிலளித்​தார். மேலும், பிசிசிஐ-​யின் கிரிக்​கெட் இயக்​குந​ராக லக் ஷ்மண் நியமிக்​கப்​படு​வ​தாக உலா வரும் வதந்​தி​களுக்​கும் சைகியா முற்​றுப்​புள்ளி வைத்​தார்.

இது​போன்ற புதிய வதந்​தி​களுக்கு நான் கருத்து தெரிவிக்க விரும்​ப​வில்​லை. நாங்​கள் அப்​படிப்​பட்ட எந்த வி​வாதத்​தை​யும் நடத்​த​வில்​லை, அப்​படிப்​பட்ட எண்​ண​மும் எங்​களிடம் இல்லை என்று அவர்​, உறு​தி​யாகத்​ தெரி​வித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here