சாலைகளில் தொழுகைக்கு அனுமதி மறுத்த நிலையில் உ.பி.யில் காவடி யாத்திரைக்காக சாலைகள் மூடல்

0
24

இன்று நாட்​டின் பெரும்​பாலான மாநிலங்​களில் பக்ரீத் கொண்​டாடப்​படு​கிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்​ரீத் நேற்றே கொண்​டாடப்​பட்​டது. வழக்​க​மாகப் பக்ரீத் சிறப்பு தொழுகை​யின் போது மசூ​திக்​குள் போது​மான இட வசதி இருப்​ப​தில்​லை. அதனால், மசூ​திக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தி வந்​தனர். தற்​போது இதற்கு எதிர்ப்​பு​கள் கிளம்பி உள்​ளன.

உ.பி.​யில் சாலைகளில் தொழுகை நடத்த அனு​மதி இல்​லை. மத வழி​பாட்​டுத் தலங்​களில் மட்​டுமே தொழுகை நடத்த வேண்​டும். அதிக எண்​ணிக்​கை​யில் வரு​வோரை சமாளிக்க சுழற்சி முறையில் தொழுகை நடத்​தலாம் என்று முதல்​வர் யோகி ஆதித்​ய நாத் அறிவுறுத்தி இருந்​தார்.

இதே​போல், பாஜக ஆளும் டெல்​லி, மகா​ராஷ்டிரா மற்​றும் மேற்கு வங்க மாநிலங்​களி​லும் பல கட்​டு​ப்பாடு​கள் விதிக்​கப்​பட்​டுள்​ளன. அதன்​படி பக்​ரீத் நாளான இன்​று, அரசு விதி​களை மீறி சாலைகளில் தொழுகை நடத்​துபவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க டிரோன்​கள் மூலம் தீவிர​மாகக் கண்​காணிக்​கப்​படு​கிறது.

இந்நிலை​யில், உ.பி. எதிர்க்​கட்​சி​யான சமாஜ்​வா​தி​யின் முராதாபாத் தொகுதி எம்​.பி. எஸ்​.டி.ஹசன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வழி​பாடு​கள் குறித்த சட்​டங்​கள், விதி​முறை​கள் அனை​வருக்​கும் சமமாகப் பொருந்​தும் வகை​யில் இருக்க வேண்​டும். பக்​ரீத் தொடர்​பான அறி​விப்​பு​கள், இந்து சகோ​தரர்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கும் நோக்​கிலேயே வெளி​யிடப்​படு​கின்​றன. முரா​தா​பாத் பகு​தி​யிலும் கடந்த 2 ஆண்​டு​களாகச் சாலைகளில் தொழுகை நடத்துவதில்லை. தற்​போது, ஈத்கா வளாகத்​துக்கு உள்​ளேயே சுழற்சி முறை​யில் தொழுகை நடத்​தப்​படு​கிறது.

ஒரு மணி நேரம் மட்​டுமே நடை​பெறும் இந்த சிறப்பு தொழுகைக்கு ஏன் எதிர்ப்​பு ?. பொது​ மக்​களின் போக்​கு ​வரத்துக்காகவே சாலைகள் பயன்பட வேண்​டும். ஆனால், மக்​கள் சாலைகளி​லேயே தங்​கள் வாழ்​வா​தா​ரத்​துக்​கான தொழில்​களை செய்​கின்​றனர். வாகன டயர்​களுக்கு பஞ்​சர் ஒட்​டு​பவர்​கள் முதல் ஏழை, எளிய மக்​கள் வரை, தங்​கள் பொருட்​களைச் சாலைகளிலேயே வைத்​துப் பிழைப்பு நடத்​துகின்​றனர். அதுவே அவர்​களின் வாழ்​வா​தா​ர​மாக இருப்​ப​தால், அவர்​களை அங்கிருந்து அப்​புறப்​படுத்​து​வது முறையல்ல.

தவிர, விசேஷ நாட்​களில் இலவச உணவு வழங்​கும் கூடாரங்​கள் மற்​றும் பல்​வேறு வகை​யான மதச் செயல்​பாடு​கள் சாலைகளிலேயே நடை​பெறுகின்​றன. ‘காவடி யாத்​திரை’ போன்ற நிகழ்​வு​களுக்​காகச் சாலைகள் மாதக் கணக்​கில் மூடப்படுகின்றன. இதனால் அவ்​வழியே செல்​பவர்​களுக்​குப் போக்​கு​வரத்து இடையூறு ஏற்​படு​கிறது. சட்​டங்​கள் இயற்​றப்​பட்டால், அவை அனை​வருக்​கும் சமமாக இருக்க வேண்​டும். குறிப்பிட்ட ஒரு மதத்​தைச் சார்ந்​தவர்​களுக்​கு மட்​டும்​ பொருந்​தக்​ கூடிய​தாக இருக்​கக்​ கூ​டாது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here