குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் கணேசபுரம், ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. பேரூர் தலைவர் ஆல்வின் ராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய தலைவர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். கூட்டத்தில், ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ரீத்தாபுரம் பேரூர் பகுதியில் உள்ள இந்துக்கள் தங்கள் வீடுகளில் பூஜை செய்வதற்கும், பூஜை பொருட்கள் வாங்க இயலாதவர்களுக்கு அவற்றை வாங்கி கொடுப்பதற்கும் என பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.