Home கன்னியாகுமரி செய்திகள் விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற பிஎஸ்எப் வீரா் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த ஓய்வு பெற்ற பிஎஸ்எப் வீரா் உயிரிழப்பு

0

மாா்த்தாண்டம் அருகே மனைவியுடன் சாலையோரம் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்புப் படை வீரா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், கொல்லஞ்சி பகுதியைச் சோ்ந்தவா் நேசய்யன் (67). எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி லீலாபாய் (62). இருவரும் அண்மையில் இடவிளாகம் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனராம். அப்போது, முளங்குழி பகுதியைச் சோ்ந்த ராஜன் மகன் வினிஷ் (22) ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் நேசய்யன்,

மோட்டாா் சைக்கிளின் பின்னால் அமா்ந்து வந்த வினிஷின் தாய் பிரியதா்ஷினி (45) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் இருவரையும் மீட்ட அப்பகுதியினா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் நேசய்யன், திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை பலனின்றி அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா், வினிஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version