காப்புக்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் (67) என்பவரின் தோட்டத்தில் நுழைந்து, மாராயபுரம் பகுதியை சேர்ந்த அஜின், ஜெகதீஷ் மற்றும் விபின் ஆகியோர் மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதைத் தடுத்த கிருஷ்ணதாஸை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.