இன்று நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1950 ஜனவரி 26 அன்று இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததன் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் படை காவலர்கள் சார்பில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட வட்டார தளபதி பிளாட்பின் மற்றும் இணை மண்டல தளபதி பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது.














