வரலாறு காணாத மழையால் பெருவெள்ளம் – அமெரிக்காவில் 52 பேர் உயிரிழப்பு; 27 பேரை காணவில்லை

0
169

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. கனமழை வெள்ளத்தால் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் தென் மத்திய பகுதியில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்த மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 4ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது.

இதன்​ காரண​மாக கடந்த 5-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டன. இதில் 37 பேர் உயி​ரிழந்​தனர்.

மேற்கு கெர் பகு​தி​யில் மாணவி​களுக்​கான சிறப்பு முகாம் நடை​பெற்​றது. இதில் 750 மாணவி​கள் தங்​கி​யிருந்​தனர். குவாடலூப் நதி வெள்​ளத்​தில் சிறப்பு முகாமின் கூடாரங்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டன. பெரும்​பாலான மாணவி​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டனர். 15 மாணவி​கள் சடலங்​களாக மீட்​கப்​பட்​டனர். 27 மாணவி​களை காண​வில்​லை.

சுமார் 1,000-க்​கும் மேற்​பட்ட மீட்​புப் படை வீரர்​கள் இரவு, பகலாக வெள்ள நிவாரண பணி​களில் ஈடு​பட்டு உள்​ளனர். ஹெலி​காப்​டர்​கள், ரோந்து படகு​கள் மூலம் காணா​மல்​ போன மாணவி​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

அடுத்த சில நாட்​களுக்கு டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை தொடரும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதனால் நதி கரையோரம் வசிக்​கும் மக்​கள் பாது​காப்​பான இடங்​களுக்கு அப்​புறப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

சர்​வ​தேச அளவில் பரு​வநிலை மாறு​பாடு பெரும் சவாலாக உரு​வெடுத்​திருக்​கிறது. இதன் ​காரண​மாக அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களில் அதிக வெப்​பம், அதிக குளிர், வரலாறு காணாத கனமழை என பெரும் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன.

பரு​வநிலை மாறு​பாடு காரண​மாகவே தற்​போது டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை, பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது என்று சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here