குஜராத்தை வீழ்த்தி மீண்டும் சாம்பியனாக மகுடம் சூடியது ஆர்சிபி | IPL Final

0
31

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து சாதனை படைத்துள்ளது. 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, ஆர்சிபியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க வீரர்கள் சுப்மன் கில் (10) மற்றும் சாய் சுதர்சன் (12) ஆகியோர் பவர்பிளேயிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினர். 

எனினும், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி 37 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அணிக்கு முட்டுக்கொடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆர்சிபி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராசிக் சலாம் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மற்றும் வெங்கடேஷ் ஐயர் (32) ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இறுதிப்போட்டியில் விஸ்வரூபம் எடுத்த விராட் கோலி, வெறும் 25 பந்துகளில் ஐபிஎல் வரலாற்றில் தனது அதிவேக அரை சதத்தைப் பதிவு செய்து சாதனை படைத்தார். ரஷித் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பத்தை ஏற்படுத்தினார்.

எனினும், இறுதிவரை களத்தில் நின்ற கோலி 42 பந்துகளில் 75 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து, 12 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. 

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here