15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

0
19

பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை உள்​ளிட்ட 15 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ரேஷன் கடை ஊழியர்​கள் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை உரு​வாக்க வேண்​டும், ‘தா​யு​மானவர்’ திட்​டத்​தில் உள்ள பிரச்​சினை​களைக்களைய வேண்​டும் என்பன உள்​ளிட்ட 15 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி தமிழ்​நாடு அரசு நியாய​விலைக்​ கடை பணி​யாளர் சங்​கம் சார்​பில் கோரிக்கை ஆர்ப்​பாட்​டம் சென்னை சிவானந்தா சாலை​யில் நேற்று நடை​பெற்​றது.

இந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் கோ.ஜெயசந்​திர​ராஜா தலைமைவகித்​தார். இந்​திய கம்​யூனிஸ்ட் எம்​.பி. கே.சுப்​பு​ராயன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

ஆர்ப்​பாட்​டம் குறித்து செய்​தி​யாளர்​களிடம் கோ.ஜெயசந்​திர​ராஜா கூறிய​தாவது: தமிழக ரேஷன் கடைகளில் பணிபுரிந்​து​வரும் பணி​யாளர்​களுக்கு கடந்த 30 ஆண்​டு​களாக ஆக்​கப்​பூர்​வ​மான பயன்​கள் எது​வும் கிடைக்​க​வில்​லை.

பல துறை​களின் கட்​டுப்​பாட்​டின் கீழ் செயல்​படும் ரேஷன் கடைகளை ஒரே துறை​யின் கீழ் கொண்​டு​வரும் வகை​யில் பொது விநி​யோகத் திட்​டத்​துக்கு தனித்​துறை, அத்​தி​யா​வசி​யப் பொருட்​கள் அனைத்​துக்​கும் பொட்டல முறை, ஆதார் சரி​பார்ப்பு 40 சதவீத​மாக குறைக்​கப்பட வேண்​டும் போன்ற கோரிக்​கைகள் இன்​னும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

கல்​வித் தகு​திக்​கேற்ப ஊதி​யம் வழங்க ஏது​வாக, ஐஏஎஸ் அதி​காரி தலை​மை​யில் ஊதிய மாற்​றக் குழு அமைத்து 2026-ம் ஆண்டு ஜனவரிக்​குள் ஊதிய உயர்வு வழங்க வேண்​டும்.

மகளிர் நடத்​தும் ரேஷன் கடைகளை அரசு ஏற்று அவர்​களுக்​கும் ரேஷன் கடை பணி​யாளர்​களைப் போல் ஊதி​யம் வழங்க வேண்​டும். ‘தா​யு​மானவர்’ திட்​டத்​தில் உள்ள பிரச்​சினை​களைக்களைந்​து, அனைத்து ரேஷன் கடைகளி​லும் எடை​யாளரை நியமிக்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட 15 அம்ச கோரிக்​கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்​டும்.

கோரிக்​கைகளை நிறைவேற்​றாத பட்​சத்​தில் மாநில செயற்​குழு கூட்​டத்​தைக் கூட்​டி, அடுத்​தகட்ட போராட்​டங்​களை முன்​னெடுப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here