கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் பகுதியில் சுனாமி குடியிருப்பு பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் என்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்றும் அவர் அங்குள்ள மீனவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். தேவையான வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
            













