செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் ரயில்வே கேட் மூடல்: சாலை துண்டிப்பால் கிராம மக்கள் போராட்டம்

0
21

செங்கல்பட்டு – அரக்​கோணம் ரயில்வே தடத்​தில் ஆத்​தூர் கிராமம், வடபாதி பகு​தியை இணைக்​கும் முக்​கிய ரயில்வே கேட்டை தெற்கு ரயில்வே நிர்​வாகம் நள்​ளிர​வில் மூடி, சாலையை தோண்​டிய​தால் 2,000-க்​கும் மேற்​பட்ட குடும்​பங்​கள் போக்​கு​வரத்து வசதி இன்றி தவிப்​ப​தாக பொது​மக்​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர்.

செங்​கல்​பட்டு அருகே ஆத்​தூர் – வடபாதி ரயில்வே கேட் வழி​யாக வடபா​தி, அம்​பேத்​கர் நகர் உள்​ளிட்ட பகு​தி​களில் வசிக்​கும் மக்கள் தினசரி இவ்வழியாக சென்று வரு​கின்​றனர். மேலும், சுமார் ஆயிரம் ஏக்​கர் பரப்​பள​வில் நெல், வாழை, கரும்பு உள்​ளிட்ட விவ​சாய நிலங்​களுக்​கும் இந்த வழியே பிர​தான அணுகு​முறை​யாக இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், அரக்​கோணம் – செங்கல்பட்டு ரயில்வே பாதை மேம்​பாட்டு பணி​களின் ஒரு பகு​தி​யாக, தற்​போதைய ரயில்வே கேட்டை மூடி, அதற்கு பதிலாக சுரங்​கப்​பாதை அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்​துள்​ளது.

இதுகுறித்து ஏற்​கெனவே அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டு, பணி​கள் நிறைவடை​யும் வரை அரு​கில் உள்ள மாற்று சுரங்​கப்​பாதையை மக்​கள் பயன்​படுத்​து​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து நள்​ளிர​வில் ரயில்வே கேட் மூடப்​பட்​டு, பொக்​லைன் மூலம் சாலை தோண்​டப்​பட்​ட​தால், அந்த வழி​யாக செல்ல முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

இதற்கு எதிர்ப்பு தெரி​வித்து கிராம மக்​கள் சாலை மறியல் போராட்​டத்​தில் ஈடுபட திட்​ட​மிட்​ட​தாக தகவல் கிடைத்​ததைத் தொடர்ந்​து, கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் தினகரன் தலை​மை​யில் 200-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் அப்​பகு​தி​யில் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர்.

போராட்​டத்​தில் ஈடுபட முயன்ற கிராம மக்​களை ஆத்​தூர் பேருந்து நிறுத்​தம் அருகே போலீ​ஸார் தடுத்து நிறுத்தி பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக கூறி 11 பேரை கைது செய்​து, தனி​யார் மண்​டபத்​தில் தங்​க​வைத்​தனர்.

இதுகுறித்து கிராம மக்​கள் கூறிய​தாவது: “ரயில்வே கேட் அமைந்​துள்ள இடத்​தின் அருகே ஏரி மற்​றும் நீர்​வரத்து கால்​வாய் உள்​ளது. அந்த பகு​தி​யில் சிறிதளவு ஆழமாக தோண்​டி​னாலே ஊற்று நீர் வெளிப்​படும். எனவே அங்கு சுரங்​கப்​பாதை அமைத்தால் மழைக்​காலங்​களில் தண்​ணீர் தேங்கி பயன்​பாடற்​ற​தாக மாறி​விடும்.

தற்​போது மாற்று வழி​யாக பயன்​படுத்​து​மாறு கூறப்​படும் சுரங்​கப்​பாதை​யும் மிக​வும் குறுகலாக உள்​ளது. அதனால் விவ​சாய இடு​பொருட்​கள் ஏற்​றிச் செல்​லும் லாரி​கள், அறு​வடை இயந்​திரங்​கள், வாக​னங்​கள் செல்ல முடி​யாது. மழைக்​காலங்​களில் அந்த சுரங்​கப்​பாதை​யிலும் தண்​ணீர் தேங்​கும் அபா​யம் உள்​ளது.

எனவே ரயில்வே கேட்டை மூடும் திட்​டத்தை கைவிட்​டு, பொது​மக்​கள் மற்​றும் விவ​சா​யிகளின் நீண்​ட​கால நலனை கருத்​தில் கொண்டு சுரங்​கப்​பாதைக்கு பதிலாக மேம்​பாலம் அமைக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று வலி​யுறுத்​தினர்.

இந்த விவ​காரம் காரண​மாக ஆத்​தூர் மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் பதற்​ற​மான சூழல் நிலவி வரும் நிலை​யில், பொது​மக்​கள் மற்​றும் ரயில்வே நிர்​வாகம்​ இடையே சுமூகத் தீர்​வு காண வேண்​டும்​ என்​ற கோரிக்​கை வலுத்​து வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here