திங்கள் நகர் மாநில நெடுஞ்சாலையில் நுள்ளிவிளையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தப் பணியால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் பாலம் அமைக்கும் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், விஜய் வசந்த் எம்பி ரயில்வே மேம்பாலத்தை ரயில்வே துறை அதிகாரிகளுடன் நேரில் நேற்று பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் பாதிக்கப்படாமல் பழைய பாலத்தை விரிவுபடுத்தி மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிச் சென்றனர்.