தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ வள்ளியாற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமடைந்தார். அப்போது காரில் சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, காரை நிறுத்தி காயமடைந்த ஓட்டுநரை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆற்றில் பாய்ந்த ஆட்டோவின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.














