புதுக்கடை அருகே பைங்குளம் பகுதி தேங்காய்பாறை விளையை சேர்ந்தவர் மோகன் தாஸ் (67). இவர் தேங்காய் பறிக்கும் தொழிலாளி. நேற்று வீட்டின் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியுள்ளார். அப்போது தென்னை மரக் கொண்டையில் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்க வருமாறு புதுக்கடை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
புதுக்கடை போலீசார் குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று பார்த்தபோது மோகன்தாஸ் என்பவர் மயங்கிய நிலையில் தென்னை மரத்தின் கொண்டையில் காணப்பட்டார். தீயணைப்பு வீரர்கள் தென்னை மரத்தில் ஏறி கயிறு மூலம் மீட்டு புதுக்கடை காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.














