Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: பெண் மீது தாக்குதல் ; 2 பேர் மீது வழக்கு

புதுக்கடை: பெண் மீது தாக்குதல் ; 2 பேர் மீது வழக்கு

0

புதுக்கடை அருகே பிலாப்பழஞ்சி என்ற இடத்தை சேர்ந்தவர் ஜின்சி (40). இவரது கணவர் ஆல்பர்ட் என்பவர் வெளிநாட்டில் உள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சரவணா தேவி. சரவணா தேவிக்கும் ஜின்சியின் கணவருக்கும் தொடர்பு உள்ளதாக ஜின்சிக்கு சந்தேகம் ஏற்பட்டு, பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் ஜின்சிக்கும் சரவணா தேவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணா தேவியும், அவரது உறவினர் ரொபின்சன் என்பவரும் ஜின்சியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த ஜின்சி குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version