நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் ஹோட்டல்களின் முன் பகுதியில் வெளியே அடுப்புகள் போட்டு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வெளியில் அடுப்பு போட்டு சமையல் செய்த அடுப்புகளை அகற்ற அவர் உத்தரவிட்டார். ஹோட்டல்களுக்கு உள்ளே அடுப்புகளை வைத்து சமையல் செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
