புதுக்கடை போலீஸ் ஆய்வாளர் மாடசாமி தலைமையில், தேங்காப்பட்டணம் பகுதியில் அரசு அனுமதி இன்றி கல்குவாரியிலிருந்து பாறைகளை உடைத்து டெம்போக்கள் மூலம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது, கருங்கற்களை உடைத்து டெம்போக்களில் ஏற்றி கடத்த முயன்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனங்கள் மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார், தென்காசி பகுதியைச் சேர்ந்த முப்புடாதி மற்றும் கல்குவாரி உரிமையாளர் ஹரிசந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.














