மேலங்கலம் பகுதி பட்டன்காடு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் தங்கப்பன் மனைவி பங்கஜம் (50). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி நிர்மலா (50). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். பங்கஜத்துக்கு பணம் கொடுத்தது சம்பந்தமாக இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. நேற்று நிர்மலாவும் அவரது மகள் சங்கீதாவும் சேர்ந்து பங்கஜத்தின் வீட்டினுள் புகுந்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த பங்கஜம் ஆஸ்பத்திரியில் உள்ளார். தாய் நிர்மலா, மகள் சங்கீதா மீது புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.