புதுக்கடை அருகே மாராயபுரத்தைச் சேர்ந்த 20 வயதான கல்லூரி மாணவி ஜெனிஷா நேற்று காலை வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால், தாயார் ஜெகதா புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்கு பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
