கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் போராட்டம் நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் அமைப்புகளை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்த இடம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி என்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கருதி போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருவட்டாறு காவல் நிலையம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
