பார்த்திபபுரம் பகுதியைச் சேர்ந்த சதி (46) என்பவரின் மகளை, அதே பகுதியைச் சேர்ந்த தனிஷ் (26) என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக தனிஷின் மனைவி பெற்றோரின் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், தனது மருமகன் வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்ட மாமனார் சதியை, தனிஷ் கொலை செய்ய முயன்றுள்ளார். புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.