புதுக்கடை: வீடு புகுந்து மின் சாதனங்கள் திருட்டு; ஒருவர் கைது

0
281

புதுக்கடை அருகே கிள்ளியூர், பருத்தித்காட்டு விளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜெர்சன் மனைவி பெமி (36). ஜெர்சன் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். ஊரில் புதிய வீட்டு வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் புதிய வீட்டில் வைத்திருந்த மின் வயர்கள் மற்றும் எலக்ட்ரிக் சுவிட்ச் போர்டுகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் என தெரிய வந்தது.  

இது சம்மந்தமாக பெமி புதுக்கடை போலீசில் புகார் செய்தார். புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் வீட்டில் உள்ள எலக்ட்ரிக் பொருட்களை திருடியதாக இனயம் பகுதி தோப்புவிளை என்ற இடத்தை சேர்ந்த  ஜெயசிங்(43) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here