குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவு ரத்தானதால் தனியார் கட்டுமான உரிமையாளர் சிறையில் இருந்து விடுவிப்பு

0
26

 தனி​யார் கட்​டு​மான உரிமை​யாளர் மீதான குண்டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை உயர் நீதி​மன்​றம் ரத்து செய்​த​தால் அவர் சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார்.

தேமு​திக பொருளாள​ரும், எம்​பி​யு​மான எல்​.கே.சுதீஷின் மனைவி பூர்​ணஜோ​திக்கு சொந்​த​மான நிலத்​தில் அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​களை கட்டி பூர்​ணஜோ​திக்கு வழங்க வேண்​டிய தொகையை தராமல் ஏமாற்​றிய​தாக​வும், ஒரே குடி​யிருப்பை ஒன்​றுக்கு மேற்​பட்​ட​வர்​களுக்கு மோசடி​யாக விற்​பனை செய்​த​தாக​வும் தனி​யார் கட்​டு​மான நிறுவன உரிமை​யாள​ரான சந்​தோஷ் சர்​மாவை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தின் கீழ் சிறை​யில் அடைத்து அப்​போதைய மாநகர காவல் ஆணை​ய​ரான அருண் உத்​தர​விட்​டார்.

தனது தந்​தை​யின் உடல்​நிலையை கருத்​தில் கொண்டு அவர் மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி சந்​தோஷ் சர்​மா​வின் மகள் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி. லட்​சுமி நாராயணன் ஆகியோர், தனி​யார் கட்​டு​மான உரிமை​யாளரை குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தில் சிறை​யில் அடைத்த கூடு​தல் டிஜிபி​யான அருண் நேரில் ஆஜராக உத்​தர​விட்​டிருந்​தனர்.

அதன்​படி தற்​போது லஞ்ச ஒழிப்​புத்​துறை அதி​காரி​யாக பதவி வகிக்​கும் அருண் உயர் நீதி​மன்​றத்​தில் நேரில் ஆஜராகி விளக்​கமளித்​தார். இந்​நிலை​யில், இந்த வழக்​கில் நீதிப​தி​கள் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில், “அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் கட்டி கொடுப்​ப​தாகக்​ கூறி ஏமாற்றி வி்ட்​ட​தாக தனி​யார் கட்​டு​மான நிறுவன இயக்​குநர்​களான சந்​தோஷ் சர்மா, அவரது மனைவி கல்​பனா சர்மா ஆகியோர் மீது அளிக்​கப்​பட்ட புகார்​களின் அடிப்​படை​யில் மாநகர காவல் ஆணை​யர் சந்​தோஷ் சர்​மாவை குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் கடந்​தாண்டு சிறை​யில் அடைக்க உத்​தர​விட்​டார்.

ஒரு கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர் மோசடி​யில் ஈடு​பட்​டார் என்​றால் அதற்​கான குற்​றச்​சாட்​டு​களின் அடிப்​படை​யில் குற்ற வழக்​கை பதிவு செய்​ய​லாம். ஆனால், அதற்​காக குண்​டர் தடுப்​புச்​சட்​டத்​தில் அடைத்​தது அதி​கார துஷ்பிரயோகம்.

எனவே சந்​தோஷ் சர்மா மீதான குண்​டர் தடுப்​புச்​சட்ட உத்​தரவை ரத்து செய்​கிறோம்” என, உத்​தர​விட்டனர். இந்த உத்​தர​வின் அடிப்​படை​யில் சந்​தோஷ் சர்மா சிறை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here