Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் திடீர் சாவு

நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் திடீர் சாவு

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழ ராமன்புதூர் தட்டான்விளையை சேர்ந்தவர் விமல் வெங்கடேஷ் (வயது 32), செல்போன் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் நோய் பாதிப்பு காரணமாக கடந்த 17-9-2024 அன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்கள் சிகிச்சை பெற்ற அவரை, பின்னர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த விமல் வெங்கடேஷ் நேற்று முன்தினம் மாலை டிஸ் சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த அவருக்கு திடீரென உடல்நிலை மோசமானது.

இதையடுத்து அவரை மீண்டும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்தபோது விமல் வெங்கடேஷ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் அவருடைய மனைவி மரிய ஜென்சி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version