நமீபியா கலைஞர்களுடன் இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி

0
148

நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.

5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று நமீபியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ஒரு பக்கத்தில் மேளம் போன்ற பழங்கால தோல் கருவியை வாசித்தபடி கலைஞர்கள் இருந்தனர். அப்போது அங்கு சென்ற பிரதமர் மோடி, கலைஞர்களுடன் இணைந்து தனது கைகளால் தோல் இசைக் கருவியை வாசித்து மகிழ்ந்தார். பிரதமர் மோடி உற்சாகமுடன்

இசைக்கருவியை வாசிப்பதைக் கண்ட அந்தக் கலைஞர்கள் கூடுதல் உற்சாகத்துடன் கருவியை இசைத்து மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here