மலேசியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

0
10

பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக மலேசியா சென்​றடைந்​தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இரு தரப்​புக்​கும் இடையே இன்று பல்​வேறு முக்கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன.

மலேசி​யா​வுக்கு வருமாறு பிரதமர் நரேந்​திர மோடிக்கு அந்​நாட்டு பிரதமர் அன்​வர் இப்​ராகிம் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, 2 நாள் பயண​மாக பிரதமர் மோடி நேற்று மலேசியா சென்​டைந்​தார்.

கோலாலம்​பூர் விமான நிலை​யத்​தில் அவருக்கு சிறப்​பான வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. இந்​தியா – மலேசியா இடையே தொடர்ந்து சிறப்​பான நட்​புறவு உள்​ளது. அந்த உறவை இன்​னும் வலுப்​படுத்த இரு நாட்டு தலை​வர்​களும் முடி​வெடுத்​துள்​ளனர்.

இதுகுறித்து மலேசி​யா​வுக்​கான இந்​திய தூதரக அதி​காரி பி.என்​.ரெட்டி கூறியதாவது: பிரதமர் மோடி வரு​கை​யின்​போது இந்​தியா – மலேசியா இடையே வர்த்​தகம், பொருளா​தா​ரம், வளர்ந்து வரும் தொழில்​நுட்​பம், எரிசக்​தி, கல்வி உட்பட பல்​வேறு துறை​களில் ஒத்​துழைப்பு குறித்து விரி​வாக ஆலோ​சனை நடத்​தப்பட உள்​ளது.

வழக்​க​மான துறை​கள் மட்​டுமின்​றி, புதிதாக வேறு எந்​த துறை​களில் இரு நாடு​களும் சேர்ந்து செயல்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் உள்ளன என்​பது குறித்​தும்

ஆலோ​சிக்​கப்​படும். இவ்வாறு அவர் கூறினார்.

இரு நாடு​களுக்​கும் இடையே இன்று முக்​கிய ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாக உள்​ளன. மோடி வரு​கையை முன்​னிட்​டு, மலேசி​யா​வில் வாழும் இந்​தி​யர்​கள் கோலாலம்​பூரில் பிரம்​மாண்ட நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளனர். இதில் ஆயிரக்​கணக்​கான இந்​தி​யர்​கள் பங்​கேற்க உள்​ளனர். இதில் மலேசி​யாவின் கலாச்​சார நிகழ்ச்​சிகளும் நடை​பெற உள்​ளன. பிரதமர் மோடி​யுடன், அந்​நாட்டு பிரதமர் அன்​வர் இப்​ராகி​மும்​ இதில் பங்​கேற்​கிறார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here