நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 2-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான வெஸ்லி சோவுடன் மோதினார். இந்த ஆட்டம் 116-வது நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரான ஆர்மகெடானில் வெஸ்லி சோ 27-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இதில் 60-வது நகர்த்தலின் போது அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்றார். உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் மோதிய ஆட்டம் 85-வது நகர்த்தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடைபெற்ற ஆர்மகெடானில் 41-வது நகர்த்தலில் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
