நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை, மற்றும் எல்லா சாமிகளுக்கும் பதிவு தீபாராதனை நடைபெற்றது. இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவாசக சபை தலைவர் சின்னையன், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சேகர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
            













