Home மாநில செய்திகள் இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி

இரவு நேரங்களில் தொடரும் மின்தடை: சென்னை, புறநகர் பகுதி பொதுமக்கள் கடும் அவதி

0

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் தொடரும் மின்தடை காரண​மாக பொது​மக்​கள் அவதி அடைகின்​றனர். தமிழகத்​தில் கடந்த சில நாட்​களாக கோடை வெயி​லின் தாக்​கம் அதி​கரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்​களாக சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இரவு நேரங்​களில் திடிரென மின்​சா​ரம் துண்​டிக்​கப்​படு​கிறது. இதனால் பொது​மக்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி​யுள்​ளனர்.

நள்​ளிரவு நேரங்​களில் ஏற்​படும் மின்​வெட்டு காரண​மாக குழந்​தைகள், முதி​ய​வர்​கள் மற்​றும் நோயாளி​கள் தூக்​கமின்றி தவித்து வரு​கின்​றனர். மின்​சா​ரம் எப்​போது வரும், எப்​போது போகும் என்று தெரி​யாத நிலை நீடிப்​ப​தால், மறு​நாள் வேலைக்கு செல்​வோர் கடுமை​யான மன உளைச்​சலுக்கு ஆளாகி​யுள்​ளனர்.

மின்​தடை குறித்து மின்​வாரிய அலு​வல​கங்​களைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்க முயன்​றால், முறை​யான பதில்​கள் அதி​காரி​களிடம் இருந்து கிடைப்​ப​தில்லை என்​றும், தொலைபேசி இணைப்​பு​கள் துண்​டிக்​கப்​படு​வ​தாக​வும் மக்​கள் குற்​றம்​ சாட்​டு​கின்​றனர்.

இரண்டு நாட்​களுக்கு முன் சென்​னை​யில் பெரம்​பூர், ராயபுரம் உள்​ளிட்ட பகு​தி​களி​லும் புறநகர் பகு​தி​களான அம்​பத்​தூர், ஆவடி போன்ற பகு​தி​களி​லும் 2 மணி நேரம் வரை மின்​சா​ரம் தடைப்​பட்​டிருந்​தது.

மேலும் நேற்று முன்​தினம் கொளத்​தூர், வில்​லி​வாக்​கம், தண்​டை​யார்​பேட்​டை, ராயபுரம், திரு​வொற்​றியூர், துரைப்​பாக்​கம், சோழிங்​கநல்​லூர் உள்​ளிட்ட பகு​தி​களி​ல் மின்​தடை ஏற்​பட்​டது.

கொளத்​தூர் பகு​தி​யில் நேற்று முன்​தினம் 4 மணி நேர​மாக மின் தடை ஏற்​பட்​டுள்​ள​தாக கூறி மக்​கள் வீதி​யில் இறங்கி போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதே​போல பல இடங்​களில் மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதுகுறித்து மின் வாரிய அதி​காரி​களிடம் கேட்​ட​போது, “இரவு நேரங்​களில் வீடு​களில் அதி​க​மான ஏசி பயன்​பாடு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் இரவு பணி போன்ற காரணங்​களால் மின் தேவை அதி​கரிக்​கிறது.

இதன் காரண​மாக, மின் மாற்​றிகள் மற்​றும் வளைய சுற்று அமைப்​பு​களில் உள்ள டிரிப்​பர் செயல்​பட்டு மின்​சா​ரம் நிறுத்​தப்​படு​கிறது. இதுகுறித்து புகார் கிடைத்​தவுடன் அதி​கபட்​சம் ஒரு மணி நேரத்​தில் சரி செய்​யப்​பட்டு மீண்​டும் மின்​சா​ரம் விநி​யோகிக்​கப்​படு​கிறது ” என கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version