கன்னியாகுமரி மாவட்டம் மீனாட்சிபுரம், ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், மாலை 5 மணி வரையிலும் குறிப்பிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும். மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும், ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும், முப்பந்தல் துணை மின் நிலையத்தின் கீழ் வரும் மங்கம்மாள் சாலை, கண்ணுபொத்தை, குமாரபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கும் மின்சாரம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.














