தமிழக காவல் துறையில் புதிதாக பணியில் சேர்ந்த 14 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலர் கே.மணிவாசன் நேற்று பிறப்பித்த உத்தரவு: ஐபிஎஸ் அதிகாரியான அன்ஜித் ஏ நாயர் தூத்துக்குடி உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், பி.அங்கிதா பட்டுக்கோட்டை உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், எஸ்.அஸ்வினி திருச்செங்கோடு உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், பிஸ்வஜித் பாண்டா திருநெல்வேலி ஊரக உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சத்ரியா கவின் டிஜே சிதம்பரம் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், எஸ். இன்பா திருவெறும்பூர் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், பி.மஞ்சிமா திண்டுக்கல் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், மன்னம் சுஜித் சம்பத் ராசிபுரம் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நீல் சர்மா கோவில்பட்டி உட்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், கே.நேஹா ராமநாதபுரம் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், பிரியங்கா பார்கவ் நாகப்பட்டினம் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், ராகுல் வி கோபால் திருவண்ணாமலை ஊரக உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், சைந்தானே ஸ்வப்னிலா அணில் ராஜபாளையம் உள்கோட்ட உதவி எஸ்பி-யாகவும், தனூ சிங்மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உள்கோட்ட உதவி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, தமிழக கேடர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள். இந்த 14 பேரும் பயிற்சி முடித்து தற்போது புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர்.
