பிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா திடீர் மரணம்

0
22

பிரபல கன்னட நடிகை ரஷ்மி லீலா (37), ‘தெலுங்கு ஜானகி’, ‘காவலு​தா​ரி’, ‘காவ்​யாஞ்​சலி’ உள்பட பல்​வேறு சின்​னத்​திரை தொடர்​களி​லும் சில திரைப்​படங்​களி​லும் நடித்துள்ளார். ரஷ்மி லீலா​வின் கணவர் சரிக்​கு மஞ்சு தொலைக்​காட்சி தொடர் வசன கர்த்​தா​வாக உள்​ளார்.

ரஷ்மி லீலா​ கடந்த 2019 -ம் ஆண்டு முதல் நுரை​யீரல் பிரச்சினை காரண​மாக சிகிச்​சைப் பெற்று வந்​தார். சமீபத்தில் அவருக்கு நுரை​யீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் திடீரென அவர் உயி​ரிழந்​தார். இதை அவர் கணவர் தெரி​வித்​துள்​ளார். அவரின் இறு​திச் சடங்கு பெங்களூரு​வில் உள்ள பனசங்​கரி மின்​ம​யானத்​தில் நேற்று நடை​பெற்​றது. நடிகை ரஷ்மி லீலா​வின் மறைவுக்கு கன்னட சின்​னத்​திரை துறை​யினர் இரங்​கல் தெரிவித்துள்ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here