கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுஜி என்ற பெண் ஒரு பஸ்ஸில் 70 ஆயிரம் பணத்துடன் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் ஈத்தாமொழி பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போது இரண்டு பெண்கள் நைசாக பணத்தை திருடியிருக்கிறார்கள்.. அவர்கள் அப்போது கையும் களவுமாக சிக்கிக்கொண்டார்கள். அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பேருந்துகளில் செல்லும் போது பணப்பை வைத்திருந்தால் கவனமாக இருக்க வேண்டும்..கூட்டமான பேருந்துகளில் ஏறக்கூடாது.. ஒருவேளை ஏறவேண்டிய நிலை இருந்தால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் கவனத்தை திசை திருப்பி பணத்தை பறிக்க திருடர்கள் தயாராக இருப்பார்கள். பணத்தை பறித்துவிட்டு நைசாக எஸ்கேப் ஆவார்கள்.
சென்னையில் ஒரு பெண் இருக்கிறார்.. அவர் தாம்பரம் பகுதியில் பேருந்துகளில் ஏறுவார்.. அவர் கையில் உள்ள உணவுப்பொருட்களை சாப்பிட கொடுப்பார். அவர் கொடுப்பதை சாப்பிட்ட உடன் பேருந்தில் ஏறும் பெண் மயங்கிவிடுவார். அவரிடம் அந்த பெண் நகைகளை பறித்துக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அவர் அண்மையில் தான் போலீசிடம் சிக்கினார்.
இதேபோல் சில திருடர்கள் நைசாக பேச்சுக்கொடுத்து வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு திருடுவார்கள். இதேபோல் சிலர் பேருந்துகளில் ஏறியதும் தூங்கியவர்களை குறிவைத்து நகை பணத்தை திருடுவார்கள்.. கன்னியாகுமரி மாவட்டத்தில் திருடிய பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளார்கள்.
நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தை அடுத்த சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜா ஆல்வின் என்பவர் கூலி தொழிலாளியாவார். இவருடைய மனைவி சுஜிக்கு 38 வயது ஆகிறது. இவர் நேற்று முன்தினம் ஆசாரிபள்ளத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.70 ஆயிரத்து எடுத்துக்கொண்டு ஈத்தாமொழிக்கு அரசு பேருந்தில் புறபட்டார்.
ஈத்தாமொழி சென்றதும் சுஜி பேருந்து இருந்து இறங்கி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, சுஜியின் அருகில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் நைசாக அவர் வைத்திருந்த பையை திறந்து அதில் இருந்த ரூ.70 ஆயிரத்தை திருடினார்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கவனித்த சுஜி உடனே திருடி திருடி என சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து செயல்பட்டு 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து ஈத்தாமொழி போலீசில் ஒப்படைத்தார்கள்.