Home மாநில செய்திகள் விஜய்யின் அறிவிப்புகளுக்கு பாமக, கம்யூனிஸ்ட் வரவேற்பு

விஜய்யின் அறிவிப்புகளுக்கு பாமக, கம்யூனிஸ்ட் வரவேற்பு

0

முதல்​வ​ராக பதவி​யேற்ற பின் முதல்​வர் ஜோசப் விஜய் அறி​வித்த திட்​டங்​களுக்கு பாமக மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளன.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: முதல்​வ​ராக பதவி​யேற்​றவுடன் 200 யூனிட் மின்​சா​ரம் இலவச​மாக வழங்​க​வும், போதை ஒழிப்​புக்கு சிறப்​புப் படை உரு​வாக்​க​வும் முதல்​வர் ஜோசப் விஜய் முதல் கையொப்​பமிட்​டதை வரவேற்று நன்​றியை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

இதைத்​தொடர்ந்து தவெக தேர்​தல் அறிக்​கை​யில் குறிப்​பிட்​டுள்​ளது போல் சாதி​வாரி கணக்​கெடுப்​பை​யும் உடனே நடத்த வேண்​டும். அதைக்​கொண்டு உரிய சமூகங்​களுக்கு உரிய இட ஒதுக்​கீடு வழங்க வழி​வகை செய்ய வேண்​டும். தமிழகத்​தில் முழு மது​விலக்​கை​யும் கொண்டு வர வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: தமிழகத்​தின் இன்​றைய தலை​யாய தேவை​கள், பெண்​களின் பாது​காப்பை உறுதி செய்​வதும், மாநிலம் முழு​வதும் தலை​விரித்​தாடும் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருள்​களை ஒழிக்க வேண்​டியதும் தான்.

அவற்​றுக்கு வகை செய்​யும் வழி​யில், தமிழகத்​தின் புதிய முதல்​வ​ராக பொறுப்​பேற்​றிருக்​கும் ஜோசப் விஜய் பெண்​களுக்கு எதி​ராக குற்​றங்​களைக் கட்​டுப்​படுத்த சிறப்பு அதிரடிப்​படை, போதைப்​பொருட்​கள் புழக்​கத்தை ஒழிக்க காவல் துறை​யில் தனி அலகு​கள் ஆகிய​வற்றை அமைப்​ப​தற்​கான கோப்​பு​களில் கையெழுத்​திட்​டிருப்​பது வரவேற்​கத்​தக்​கது.

தமிழகத்​தின் இன்​றைய முக்​கிய தேவை​களில் இன்​னொன்று சாதி​வாரி சர்வே எனப்​படும் சமூகநீதி கணக்​கெடுப்பை நடத்​து​வது. சமூகநீ​தி​யில் தமிழகத்தை தனித்​து​வப்​படுத்​திக் காட்​டு​வது 69 சதவீத இட ஒதுக்​கீடு​தான்.

ஆனால், உச்ச நீதி​மன்​றம் ஆணை​யிட்​டும் கூட சாதி​வாரி கணக்​கெடுப்பு நடத்​தப்​ப​டாத​தால், நடை​முறை​யில் உள்ள 69 சதவீத இட ஒதுக்​கீட்​டுக்கு ஆபத்து ஏற்​பட்​டுள்​ளது.

எனவே அதற்கு செயல்​வடிவம் கொடுக்க புதிய அரசு முன்வர வேண்​டும். டாஸ்​மாக், மதுக்​கடைகளை​யும் படிப்​படி​யாக மூடி தமிழகத்​தில் முழு மது​விலக்​கை​யும் நடை​முறைப்​படுத்த வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: முதல்​வர் பொறுப்​பேற்ற பிறகு, தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றும் வகை​யில் இரு மாதங்​களுக்கு 500 யூனிட் மின்​சா​ரம் பயன்​படுத்​தும் வீடு​களுக்கு 200 யூனிட் மின்​சா​ரம் கட்​ட​ணமின்றி வழங்​கப்​படும் என அறி​வித்​திருப்​ப​தை​யும், 500 யூனிட்​டுக்கு மேல் பயன்​படுத்​தும் வீடு​களுக்கு ஏற்​கெனவே நடை​முறை​யில் உள்ள 100 யூனிட் கட்​ட​ணமில்லா மின்​சா​ரம் தொடரும் என்று அறி​வித்​திருப்​ப​தை​யும் வரவேற்​கிறோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version