Home மாநில செய்திகள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சேதமடைந்த உற்சவர் சிலை சீரமைப்பு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சேதமடைந்த உற்சவர் சிலை சீரமைப்பு

0

காஞ்சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் சேதமடைந்த உற்​சவர் சிலை சீரமைக்​கப்​பட்டு கடந்த 8-ம் தேதி அதி​காலை சிறப்​புப் பூஜைகள் நடத்​தப்​பட்​டதை தொடர்ந்​து, பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

காஞ்​சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் வைகாசி பிரம்​மோற்​சவத்​தின் 3-ம் நாள் கருட சேவை உற்​சவம் வெகு விமரிசை​யாக நடை​பெறும். அதே​போல ஆனி, ஆடி மாதங்​களி​லும் கருட சேவை உற்​சவம் நடப்​பது வழக்​கம்.

அதன்​படி, ஆனி மாதத்​துக்​கான கருடசேவை உற்​சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடந்​தது. தொடர்ந்து ஆடி மாதத்​துக்​கான கருடசேவை உற்​சவம் கடந்த சில நாட்​களுக்கு முன் நடை​பெறு​வ​தாக இருந்​தது. காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் சேதமடைந்த உற்​சவர் சிலை சீரமைக்​கப்​பட்டு கடந்த 8-ம் தேதி அதி​காலை சிறப்​புப் பூஜைகள் நடத்​தப்​பட்​டதை தொடர்ந்​து, பக்​தர்​கள் தரிசனத்​துக்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

காஞ்​சிபுரம் வரத​ராஜ பெரு​மாள் கோயி​லில் வைகாசி பிரம்​மோற்​சவத்​தின் 3-ம் நாள் கருட சேவை உற்​சவம் வெகு விமரிசை​யாக நடை​பெறும். அதே​போல ஆனி, ஆடி மாதங்​களி​லும் கருட சேவை உற்​சவம் நடப்​பது வழக்​கம்.

அதன்​படி, ஆனி மாதத்​துக்​கான கருடசேவை உற்​சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடந்​தது. தொடர்ந்து ஆடி மாதத்​துக்​கான கருடசேவை உற்​சவம் கடந்த சில நாட்​களுக்கு முன் நடை​பெறு​வ​தாக இருந்​தது.

இந்​நிலை​யில், கடந்த ஜூலை 3-ம் தேதி உற்​சவருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்​த​போது, சிலை​யில் கால் பாதம், கழுத்​து, காது உள்​ளிட்ட பகு​தி​கள் சேதமடைந்த நிலை​யில் இருப்​பது தெரிய​வந்​தது.

இதனால், ஆடி கருட சேவை நடை​பெறாது என கோயில் நிர்​வாகம் அறி​வித்​தது. இதனால் சுவாமியை தரிசிக்க முடி​யாமல் ஏமாற்​றமடைந்த பக்​தர்​கள், சேதமடைந்த சிலையை உடனடி​யாக சீரமைக்க வேண்​டும் என வலி​யுறுத்​தினர்.

இதைத் தொடர்ந்​து, சேத​மான சிலையை சீரமைக்க இந்து சமய அறநிலை​யத் துறை முடிவு செய்​தது. அதன்​படி, கடந்த 6, 7 ஆகிய இரு நாட்​கள் வரத​ராஜ பெரு​மாள், தே​வி, பூதேவி உற்​சவர் சிலைகளை சீரமைக்​கும் திருப்​பணி நடந்​தது.

இந்த சீரமைப்​புப் பணி நடந்த நாட்​களில் மூல​வர் மற்​றும் பல்லி தரிசனம் செய்ய பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட​வில்​லை. தொடர்ந்து கடந்த 7-ம் தேதி உற்​சவர் சிலை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.

இதையடுத்து வேதமந்திரங்​களு​டன், சீரமைக்​கப்​பட்ட உற்​சவர் சிலைகளுக்கு புனித நீர் தெளிக்​கப்​பட்டு சிறப்​புப் பூஜைகள் செய்​யப்​பட்​டன. பின்​னர் தே​வி, பூதே​வி​யுடன் மலர் அலங்​காரத்​தில் எழுந்​தருளிய உற்​சவர் வரத​ராஜ பெரு​மாளைதரிசிக்க கடந்த 8-ம் தேதி​முதல் பக்​தர்​கள் அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

இதுகுறித்து கோயில் உதவி ஆணை​யர் சீனு​வாசன் கூறுகை​யில், “சேதமடைந்த சிலை கடந்த ஆக. 6, 7 தேதி​களில் சீரமைக்​கப்​பட்​டது. உரிய அனு​மதி பெற்று ஆகம விதி​களைப் பின்​பற்றி சரி செய்​யப்​பட்​டது.

பணி​கள் நிறைவடைந்​ததைத் தொடர்ந்​து, ஆக.8-ம் தேதி​முதல் இந்​தச் சிலை பக்​தர்​கள் வழி​பாட்​டுக்கு அனு​ம​திக்​கப்​படு​கிறது” என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version