நியூயார்க்கில் டெக் நிறுவன சிஇஓ-க்கள் உடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனை

0
250

அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவன சிஇஓ-க்கள் பங்கேற்ற வட்டமேசை கூட்ட நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அடாப் சிஇஓ சாந்தனு நாராயண், ஐபிஎம் சிஇஓ அர்விந்த் கிருஷ்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு குவாட் மாநாட்டில் பங்கேற்ற அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்தார்.இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் டெக் நிறுவன சிஇஓ-க்கள் கலந்து கொண்ட வட்டமேசை நிகழ்வில் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதில் ஏஐ, குவாண்டம் கம்யூட்டிங், செமிகண்டக்டர்ஸ் குறித்தும் பேசப்பட்டது. இந்தியாவின் அனைத்து மக்களும் இதனை அக்சஸ் செய்வதற்கான சாத்தியங்கள் குறித்தும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.“நியூயார்க் நகரில் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பலனளிக்கும் வகையிலான வட்டமேசை சந்திப்பது நடந்தது. இதில் பலவற்றை விவாதித்திருந்தோம். தொழில்நுட்ப ரீதியாக இந்தியா கண்டுள்ள முன்னேற்றங்களையும் எடுத்துரைத்தோம். இந்தியா மீது இந்நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.” என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here