Home சினிமா செய்திகள் அம்மாவுக்காக ‘பிச்சைக்காரன்’, மகளுக்காக ‘அப்பா குட்டி’ – இயக்குநர் மாறன் நேர்காணல்

அம்மாவுக்காக ‘பிச்சைக்காரன்’, மகளுக்காக ‘அப்பா குட்டி’ – இயக்குநர் மாறன் நேர்காணல்

0

வழக்​க​மாக க்ரைம், த்ரில்​லர் பாணி கதைகளைப் படமாக்​கும் இயக்​குநர் மாறன், ஃபேமிலி என்​டர்​டெ​யினரோடு வந்​திருக்​கிறார், ‘அப்பா குட்​டி’​யில். விஜய் ஆண்​டனி, பிரீத்தி அஸ்​ராணி முதன்​மைப்பாத்​திரங்​களில் நடித்திருக்​கும் இந்​தப் படம் தீபாவளியை முன்னிட்டு நவ.6-ல் ரிலீஸ் ஆக இருக்​கிறது. வித்​தி​யாச​மான கதைகளைக் கொண்ட சமீபத்​திய திரைப்​படங்​கள் கொடுத்​திருக்​கும் வெற்​றி​யால் நம்​பிக்​கையோடு இருக்​கிறார், இயக்​குநர் மாறன். ‘அப்பா குட்​டி’ பற்றி பேசினோம் அவரிடம்.

Q

க்ரைம் த்ரில்​லரை விட்​டுட்டு குடும்​பக் கதைக்கு வந்​ததுக்கு ஏதாவது காரணம் இருக்​கா?

A

இயக்​குநர் அப்​படின்​னா, எல்லா வகை​யான கதைகளை​யும் பண்​ணணும் தானே. க்ரைம் கதை​தான் இயக்கணும்னு என்னை நானே பிராண்ட் பண்​ணிக்க விரும்​பலை. நிறைய பேர், ‘க்​ரைம் கதைகளையே பண்​ணிட்டு இருக்​கீங்​களே?’ன்னு உங்​களை மாதிரி பலர் கேட்​கிறாங்க. அதனால ஒரு மாற்​றத்​துக்​காக ஆக் ஷன் கலந்த ‘ஃபேமிலி என்​டர்​டெ​யினர்’ கதையை உரு​வாக்​கினேன். இதுக்​குள்​ள​யும் த்ரில்​லருக்​கான கூறுகள் இருக்​குது. பார்​வை​யாளர்​கள் ரசிக்​கிற அளவுக்கு புதிய விஷ​யங்​கள் படத்துல நிறைய இருக்கும்.

Q

விஜய் ஆண்​டனியை கதைக்குள்ள எப்படி கொண்டு வந்​தீங்க?

A

இந்​தக் கதையை ஒரு தயாரிப்பு நிறு​வனத்​துல இருந்​தவங்​ககிட்ட சொன்​னேன். அவங்​களுக்​குப் பிடிச்​சிருந்​தது. அவங்க, ‘இதுல விஜய் ஆண்​டனி நடிச்சா நல்​லாருக்​கும், நானே அவரை கதை கேட்​கச் சொல்​றேன்​’னு சொன்​னாங்க. அவர், அவங்​களுக்கு நண்​பர். அவங்​களே அவருக்கு போன் பண்​ணி, ‘ஒரு நல்ல கதை இருக்​கு, உங்​களுக்கு செட் ஆகும், கேட்​கிறீங்​களா?’ன்னு சொன்​னாங்க.

அவர் ‘கேட்​கிறேன், வரச் சொல்​லுங்​க’ன்​னார். சொன்​னேன், முதல் பாதி சொன்​னதுமே ‘நல்​லாருக்​கு, பண்​ணலாம்​’ன்னு சொல்​லிட்​டார். பிறகு அடுத்த பாதியை சொன்​னதும் அவருக்கு ரொம்ப பிடிச்​சிருந்​தது. ‘உடனே பண்​ணலாம், நானே தயாரிக்​கிறேன்​’னும் சொன்​னார். அப்​படித்​தான் இந்​தப் படம் தொடங்​குச்​சு.

Q

அப்​பா- மகள் கதை​தா​னா?

A

ஆமா. அப்​பாவுக்​கும் மகளுக்​கு​மான உணர்​வுப்​பூர்வமான கதை. தந்​தை – மகளுக்கு இடையே உள்ள நிபந்​தனையற்ற அன்​பு, தியாகம் மற்​றும் பிணைப்பை மைய​மாகக் கொண்​டது இந்​தப்​படம். படத்​துல விஜய் ஆண்​டனி, சினிமா புரொடக் ஷன் மேனேஜரா வர்​றார். ஆனா, இது சினிமா பற்​றிய கதை இல்​லை. இந்தப் படத்​தோட கதை, சென்னை மற்​றும் ஊட்​டி​யில நடக்​குது. தேவை​யான ஆக் ஷன், ஃபேமிலி டிரா​மா, காமெடி எல்​லாம் இருக்​கும்.

பார்​வை​யாளர்​கள், தங்​களை படத்​தோட தொடர்பு படுத்தி பார்த்​துக்​கறதுக்கு நிறைய விஷ​யங்​கள் இருக்​கு. ஒரு வகை​யில ‘பிச்​சைக்​காரன்’ படத்தை இந்​தப் படத்​தோட கொஞ்​சம் தொடர்​புப் படுத்​திப் பார்த்​துக்​கலாம். அதுல அம்​மாக்​காக, தன் வாழ்க்​கையை பணயம் வைப்​பார் ஹீரோ. இதுல தன் பொண்​ணுக்​காகப் பண்​றார். அது என்​னங்​கறது தான் படம். ஹீரோவா நடிச்​சிருக்​கிற விஜய் ஆண்​டனியே இசை​யும் அமைச்​சிருக்​கார்; எடிட்​டிங்​கும் அவர்​தான். மொத்​தம் 3 பாடல்​கள். ரொம்ப அரு​மையா வந்​திருக்​கு. இந்த வருட ஹிட் லிஸ்ட்ல இந்​தப்​பாடல்​கள் கண்​டிப்பா இருக்​கும்.

Q

இதுல நாயகியா நடிச்​சிருக்​கிற பிரீத்தி அஸ்​ராணி, சிறந்த கதா​பாத்திரங்​கள்ல நடிச்​சுட்டு வர்​றாங்​க…

A

உண்​மை​தான். இதுல​யும் அப்​படித்​தான். கதை​யில அவருக்​கும் முக்​கி​யத்​து​வம் இருக்​கு. விஜய் ஆண்​டனி, மனை​வியா வர்​றாங்க. அவங்​களுக்கு ஓர் அழகான காதல் கதை இருக்​கு. அந்த எபிசோடு சிறப்பா இருக்​கும். வழக்​க​மா, கதா​பாத்​திர​மாகவே வாழ்ந்​திருக்​காங்​கன்னு சில நடிகைகளை சொல்​வோம் இல்​லையா, இதுல பிரீத்​தி, நிஜ​மாகவே அப்​படித்​தான் மாறி​யிருக்​காங்க. சிறந்த நடிகை. இந்​தப்படம் அவங்களுக்கு ஸ்பெஷலானதா இருக்​கும். ஆரம்​பத்​துல இருந்து முடிவு வரைக்​கும் கதை​யில அவங்​களுக்கு முக்​கி​யத்​து​வம் இருக்​கு. இவங்​களோட மகளா ‘ஜன​நாயகன்​’-ல நடிச்ச பேபி லிதன்யா நடிச்​சிருக்​காங்க.

Q

படத்​துல நிறைய நட்​சத்​திரப் பட்​டாளம் இருக்​கே?

A

இந்​தக் கதைக்கு அவ்​வளவு பேர் தேவைப்​பட் டாங்க. பகவதி பெரு​மாள், ஹரிப்​பிரி​யா, அருவி மதன், சித்ரா லட்​சுமணன், ஜென்​சன் தி​வாகர், லிசி ஆண்​டனி, மூணார் ரமேஷ், முரு​கானந்​தம்னு பலர்​ நடிச்​சிருக்​காங்​க. எல்​லோருக்​கும்​ கதையில முக்​கியத்​துவம்​ இருக்​கும்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version