3 ஆண்​டு​களாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு

0
15

பிரபல டப்​பிங் கலைஞர் ரவீணா ரவி. இவர், நடிகைகள் சமந்​தா, எமி ஜாக்​சன், காஜல் அகர்​வால் உள்பட பல கதா​நாயகி​களுக்கு தமிழ், மலை​யாளப் படங்​களில் டப்​பிங் குரல் கொடுத்து வருகிறார். ‘ஒரு கிடா​யின் கருணை மனு’ படம் மூலம் நடிகை​யாக அறி​முக​மான இவர், தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலை​யில், 3 ஆண்​டு​களாகத் தொல்லைஅளித்​து​வரும் நபர்களிடம் இருந்து தன்​னை​யும் தனது நண்​பர்​கள், குடும்பத்தினரை​யும் பாது​காக்​கக் கோரி அவர் இன்​ஸ்​டா​வில் வெளி​யிட்​டுள்ள பதிவு பரபரப்பை ஏற்​படுத்​தி​உள்​ளது.

இதுபற்றி அவர், “தொடர்ந்து 3 ஆண்​டு​களாகத் தொல்லை அளித்து ​வரும் நபர்​களிடம் இருந்து என்​னை​யும் எனது குடும்​பத்​தினரை​யும் பாது​காக்​கவே இதைப் பதி​விடு​கிறேன். போலீஸில் அளித்த புகார்​கள், எச்​சரிக்​கைகள் இதை நிறுத்​தி​விடும் என்ற நம்பிக்​கை​யில் அமை​தி​யாக இருந்​தேன்.

ஆனால், சபரீஷ் என்​பவரும் அவரது இரட்டை சகோ​தரரும் என்னை​யும் என் குடும்​பத்​தினரை​யும் நண்பர்​களை​யும் தொடர்ந்து அவதூறாக​வும் ஆபாச​மாக​வும் பேசி வருகிறார்கள். அரு​வருப்​பான வார்த்​தைகளைப் பயன்​படுத்தி என்னை மட்டுமல்லாமல் எனக்கு நெருங்​கிய​வர்​களை​யும் இலக்​காக்கி குறுஞ்​ செய்​தி​களை அனுப்பி வரு​கிறார்​கள்.

என்​னால் இந்​தத் தொல்​லைகளைச் சந்​திக்க நேர்ந்த நண்​பர்​கள் மற்​றும் குடும்​பத்​தினரிடம் மன்​னிப்​புக் கேட்​டுக்​ கொள்​கிறேன். நாங்​கள் சட்​டப்​பூர்வ வழிகளை மேற்​கொண்​டோம். ஆனால் தொல்​லைகள் நிற்​க​வில்​லை. அவர் பல வலை​தளக் கணக்குகளைத் தொடங்கி அதன் மூலம் என்​னை​யும் பல நடிகைகளையும் தொடர்ந்து துன்​புறுத்தி வருகிறார். நாங்​கள் பழகிய​தாக​வும் திருமணம் செய்​வ​தாகக் கூறி ஏமாற்​றியதாக​வும் பொய்​ கதைகளைப் பதி​விட்டு வரு​கிறார்.

இந்​தி​யா​வில் பெண்​களுக்கு பாது​காப்​பான நகரம் சென்னை என்று சொல்​வார்​கள். அதை நிரூபிக்க, இது​போன்ற விஷமிகளுக்கு எதி​ராக நடவடிக்கை எடுப்​பார்​கள் என்று நம்புகிறேன்” என்று வேதனை​யுடன் தெரி​வித்​துள்​ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here