பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட கோவையை சேர்ந்த ரவுண்டு டேபிள் இந்தியா என்ற அமைப்புடன் பேசி ரூ.25 லட்சம் நிதியுதவி பெற்று 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அவர்கள் குத்து விளக்கு ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் தண்டபாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.