பேச்சிப்பாறை மலைக் கிராமங்களில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அதிகாலை மூன்று மணியளவில் ஒற்றை யானை முருகன் என்பவர் வீட்டில் வந்துள்ளது. முருகன் யானையை விரட்ட முயன்றபோது யானை முருகனை துரத்தியது. அவர் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தினார்.
யானை வீட்டின் படிக்கட்டை உடைத்து, பைக்கையும் சேதப்படுத்திய பின் வீட்டின் பின்புறம் மண்சுவரை சேதப்படுத்தியது. அக்கம்பக்கத்தினர் எழுந்து யானையை விரட்டினர். அப்போது அந்தப் பகுதியில் உள்ள வாழைத் தோட்டங்களையும் சோலார் வேலியையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.