போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவிடம் அமைதி திட்டம் சமர்ப்பிக்கப்படும்: ஜெலன்ஸ்கி அறிவிப்பு

0
15

போரை முடிவுக்​குக் கொண்டுவருவது தொடர்பான அமை​தித்​திட்​டம் இன்​னும் சில நாட்​களில் ரஷ்​யா​விடம்சமர்ப்​பிக்​கப்​படும் என்று உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்யா மற்​றும் உக்​ரைன் இடையி​லான போர் 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக தொடர்ந்து நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்த அமெரிக்கா தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்​காக 28 அம்ச பொது அமை​தித்​ திட்​டத்​தை​ அமெரிக்கா உரு​வாக்​கியது.

இந்த சூழலில், உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்கி அண்​மை​யில் அளித்த பேட்​டி​யில், ‘‘மேற்​கத்​திய நாடு​களிட​மிருந்து உறு​தி​யான பாது​காப்பு உத்​தர​வாதங்​களை பெற்​றால், நேட்​டோ​வில் இணை​யும் முயற்​சியை கைவிடத் தயா​ராக இருக்​கிறோம்’’ என்​றார்.

ரஷ்​யா​வின் முக்​கிய கோரிக்​கையே உக்​ரைன் நேட்​டோ​வில் சேரக்​கூ​டாது என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இந்​நிலை​யில் ஜெலன்​ஸ்கி நேற்று அளித்​துள்ள பேட்​டி​யில், “ரஷ்​யா​வுட​னான போரை முடிவுக்​குக் கொண்டு வரும் அமை​தித் திட்​டங்​களை ரஷ்​யா​விடம் இன்​னும் சில நாட்​களில் சமர்ப்​பிக்க உள்​ளோம்.

அமெரிக்க நாட்டு பிர​தி​நி​தி​களு​டன் இணைந்து ரஷ்​யா​வுக்கு உக்​ரைன் பிர​தி​நி​தி​கள் செல்​ல​வுள்​ளனர். உக்​ரைன், ரஷ்யா இடையே​யான போரை முடிவுக்​குக் கொண்டு வரும் அமெரிக்​கா​வின் அமை​தித் திட்​டம் நிச்​ச​யம் செயல்​படுத்​தக்​கூடியது’’ என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here