படந்தாலுமூடு பகுதியில் டீ குடிக்க வந்த பிரதீஷ் (43) என்பவரை, பிரதீஷ் (24) மற்றும் ராகுல் (28) ஆகிய இருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவரது கால் உடைந்ததாகக் கூறப்படுகிறது. திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதீஷின் புகாரின் பேரில், களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.