இடம் வாங்கியும் 75 வருடங்களாக கட்டப்படாத கட்சி அலுவலகம்! – குமுறும் கும்பகோணம் காங்கிரஸார்

0
219

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழுத்தி அழுத்தி சொல்கிறார். ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை என்று சொல்லும் கும்பகோணம் காங்கிரஸார், அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகளாகியும் கட்டப்படாமல் கிடக்கும் கும்பகோணம் நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை அதற்கு எவிடென்ஸாக காட்டுகிறார்கள்.

சு​மார் 75 வருடங்​களுக்கு முன்​பு, மருத்​து​வர் மகாலிங்​கம் என்​பவர் கும்​பகோணம் நகர காங்​கிரஸ் கமிட்​டிக்கு அலு​வல​கம் கட்​டு​வதற்​கான முயற்​சி​யில் இறங்​கி​னார். இதற்​கான நிதி​யைத் திரட்​டு​வதற்​காக பொருட்​காட்சி நடத்​தி​ய​வர், அதில் சேர்ந்த நிதி​யைக் கொண்டு 1950-ல் கும்​பகோணம் சாரங்​க​பாணி கோயில் சன்​னிதி தெரு​வில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி இடத்தை வாங்​கி​னார். அத்​தோடு அந்த முயற்சி கிடப்​பில் போன​தால், கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக வாங்​கப்​பட்ட இடமானது ஆக்​கிரமிப்​புக்கு உள்​ளானது. ஒரு​கட்​டத்​தில், காங்​கிரஸார் பெரு​முயற்சி எடுத்து ஆக்​கிரமிப்​பு​களை அகற்றி அந்த இடத்தை மீட்​டனர்.

இதையடுத்​து, மீண்​டும் கட்சி அலு​வல​கம் கட்​டும் முயற்​சி​யில் இறங்​கிய கும்​பகோணம் காங்​கிரஸார், 2022 ஏப்​ரல் 24-ல் அப்​போதைய மாநில தலை​வர் கே.எஸ்​.அழ​கிரி, கே.வீ.தங்​க​பாலு உள்​ளிட்​டோரை அழைத்து வந்து கட்சி அலு​வல​கம் கட்ட அடிக்​கல் நாட்​டினர். இது நடந்து மூன்​றாண்​டு​கள் கடந்​து​விட்ட நிலை​யில், கட்​டிடம் கட்​டு​வதற்​கான எந்த முகாந்​திர​மும் தெரிய​வில்​லை. அடிக்​கல் நாட்​டிய போது வைத்த கல்​வெட்​டும் கேட்​பாரற்று மூலைக்​குப் போய்​விட்​டது. இதனிடையே, கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக சிலர் வசூல்​வேட்டை நடத்தி வளமான​தாக​வும் சர்ச்சை வெடித்து அடங்​கியது.

இந்த நிலை​யில், கட்சி அலு​வல​கம் கட்​டு​வதற்​காக வாங்​கப்​பட்ட இடத்தை டெல்லி காங்​கிரஸ் தலைமை கையகப்​படுத்தி உடனடி​யாக அந்த இடத்​தில் கட்சி அலு​வல​கத்​தைக் கட்​டி​முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கும்​பகோணம் காங்​கிரஸ் மாமன்ற உறுப்​பினர் ஐயப்​பன் சோனி​யா, ராகுல் உள்​ளிட்​டோருக்கு கோரிக்கை மனு அனுப்பி இருக்​கி​றார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய ஐயப்பன், “கும்​பகோணம் ஒரு காலத்​தில் காங்​கிரஸ் கோட்​டை​யாக இருந்​தது. பிற்​பாடு பல்​வேறு காரணங்​களால் காங்​கிரஸ் இங்கு கொஞ்​சம் கொஞ்​ச​மாக தேய்ந்​து​விட்​டது. எஞ்சி இருக்​கும் எங்​களைப் போன்ற சில​ரால் இன்​ன​மும் இந்​தப் பகு​தி​யில் காங்​கிரஸ் உயிர்ப்​போடு இருக்​கிறது.

கட்சி அலு​வல​கம் கட்ட அடிக்​கல் நாட்​டப்​பட்ட நாளி​லேயே நன்​கொடை வசூலிக்​கப்​பட்டு அதைக் கொண்டு அந்த இடத்​தில் தற்​காலிக ஷெட் அமைக்​கப்​பட்​டது. ஆனால், அதைத் தவிர வேறெந்த வேலை​யும் அதன் பிறகு நடக்​க​வில்​லை. மீண்​டும் அந்த இடம் தனி​யார் ஆக்​கிரமிப்​புக்​குள் போய்​விடக் கூடாது என்​ப​தற்​காகவே அந்த இடத்தை கைப்​பற்றி கட்சி அலு​வல​கத்​தைக் கட்ட உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சோனி​யா, ராகுல், கார்கே உள்​ளிட்​டோருக்கு கடந்த 21-ம் தேதி மனு அனுப்​பினேன்.

அத்​துடன் சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் மாநிலத் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, கே.வீ.தங்​க​பாலு மற்​றும் மேலிட பார்​வை​யாளர்​கள் கிரிஷ் சோடங்​கர், சூரத் ஹெக்டே ஆகி​யோரைச் சந்​தித்து அவர்​களிட​மும் இது தொடர்​பாக மனு அளித்​தேன். அவர்​களும் இது தொடர்​பாக உடனடி​யாக நடவடிக்கை எடுப்​ப​தாகச் சொல்லி இருக்​கி​றார்​கள். சொன்​னபடி அவர்​கள் இந்த விஷ​யத்​தில் உரிய நடவடிக்​கையை உடனே எடுத்​தால் தான் கும்​பகோணத்​தில் காங்​கிரஸ் கட்​சிக்கு புத்​து​யிரூட்ட முடி​யும். இல்​லா​விட்​டால் கட்​சி​யின் நிலைமை இன்​ன​மும் மோச​மாகி​விடும்” என்​றார்.

கட்சி அலு​வல​கத்தை கட்​டி​முடிப்​ப​தில் என்ன பிரச்​சினை என கும்​பகோணம் மாநகர காங்​கிரஸ் கமிட்டி தலை​வர் மிர்சாவூதீனிடம் கேட்​டதற்​கு, “காங்​கிரஸ் கட்சி நிர்​வாகி​களுக்​குள் ஏற்​பட்ட குழப்​பத்​தின் காரண​மாகவே கட்சி அலு​வல​கம் கட்​டப்​ப​டா​மல் கிடக்​கிறது. விரை​வில் மாநகர நிர்​வாகி​களை அழைத்​துப் பேசி கட்சி அலு​வல​கத்தை கட்டி முடிப்​போம்” என்​றார்.

தஞ்சை வடக்கு மாவட்ட காங்​கிரஸ் கட்சி தலை​வர் டி.ஆர்​.லோக​நாதனோ, “அந்த இடத்​தில் கட்சி அலு​வல​கம் கட்ட 33 ஆண்​டு​களுக்கு முன்பே ஜி.கே.மூப்​ப​னார் அடிக்​கல் நாட்​டி​னார். அப்​போதும் கட்​டிடம் கட்​டப்​பட​வில்​லை. அடுத்​த​தாக 2022-ல் மீண்​டும் அடிக்​கல் நாட்​டப்​பட்​டது. ஆனால், கட்​டிடம் கட்​டு​வதற்​கான நிதியை யாரும் தரவில்​லை. அதனால் தேக்​கம் ஏற்​பட்​டுள்​ளது” என்​றார்.

இன்​றைக்கு அரசி​யலுக்கு வந்​தவர்​கள் எல்​லாம், “நாளைய முதல்​வர் நாங்​கள் தான்” என மார்​தட்​டு​கி​றார்​கள். ஆனால் ஒரு காலத்​தில் தமி​ழ​கத்​தையே ஆண்ட காங்​கிரஸ், கட்​சிக்கு அலு​வல​கம் கட்​டு​வதற்கு திரும்​பத் திரும்ப அடிக்​கல்லை மட்​டுமே நட்​டுக் கொண்​டிருக்​கிறது. அதனால் தான் கூட்​டணி ஆட்சி என்று சொல்​வதற்​குக் கூட இப்​போது கூச்​சப்​பட்டு நிற்​கிறது காங்​கிரஸ்​!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here