ஊராட்சி செயலர்களை புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

0
17

ஊராட்சி செயலர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்​தில் சேர்க்க வேண்​டும் என்​று, முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: தமிழக அரசின் ஊதி​யக் குழு பரிந்​துரைப்​படி, ஊராட்சி செயலர்​களுக்கு கால​முறை ஓய்​வூ​தி​யம் வழங்​கப்​பட்டு வரு​கிறது. பதிவறை எழுத்​தர் பணிக்கு இணை​யான ரூ.15,900-50,400 கால​முறை ஊதி​யத்தை ஊராட்சி செய​லா​ளர்​கள் பெற்று வரு​கின்​றனர்.

அரசுப் பணி​யாளர்​களுக்கு வழங்​கப்​படும் அகவிலைப்​படி, வீட்டு வாடகைப்​படி, மருத்​து​வப் படி போன்​றவை​யும் வழங்​கப்​படு​கிறது. அதே சமயத்​தில், அரசுப் பணி​யாளர்​களுக்கு இணை​யான பணி​சார்ந்த உரிமை​கள் ஏதும் வழங்​கப்​பட​வில்​லை. இதன் காரண​மாக, தமிழக அரசின் புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் ஊராட்சி செய​லா​ளர்​கள் சேர்க்​கப்​பட​வில்லை என தமிழ்​நாடு ஊராட்சி செயலர்​கள் சங்​கத்​தினர் தெரிவிக்​கின்​றனர்.

ஊராட்சி செயலர்​களுக்கு கீழ்​நிலை​யில் அலு​வல​கப் பணியை மட்​டுமே மேற்​கொள்​ளும் அலு​வலக உதவி​யாளர்​கள் மற்​றும் ஊராட்சி செயலர்​களுக்கு இணை​யான பதவி​யில் உள்ள பதிவுறு எழுத்​தர்​கள், புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​கப்​பட்ட நிலை​யில், அலு​வல​கப் பணி மற்​றும் களப் பணி ஆகிய இரண்​டை​யும் மேற்​கொள்​ளும் ஊராட்சி செயலர்​கள் புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​கப்​ப​டாததைக் கண்​டித்​தும், அவர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்க வலி​யுறுத்​தி​யும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்​களுக்கு ரூ.15 ஆயிரம் மாத ஓய்​வூ​தி​யம் வழங்க வலி​யுறுத்​தி​யும் கடந்த ஒரு மாத​மாக தொடர் போராட்​டத்​தில் ஊராட்சி செயலர்​கள் ஈடு​பட்டு வரு​கிறார்​கள்.

முதல்​வர் ஸ்டா​லின் இதில் உடனடி​யாகத் தலை​யிட்​டு, கால​முறை ஊதி​யம் பெற்று வரும் ஊராட்சி செயலர்​களை புதிய உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்​தில் சேர்க்​க​வும், ஓய்வு பெற்ற ஊராட்சி செயலர்​களுக்கு குறைந்​த​பட்ச ஓய்​வூ​தி​ய​மாக மாதம் ரூ.15 ஆயிரம் வழங்​க​வும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here